மாதாந்திர கட்டணம் மற்றும் நிலுவைத்தொகை பாக்கி வைத்துள்ள உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள்(LCO), பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்கள் (MSO) மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு (PLC) அபராதத்தொகை (Penalty) விதிப்பது தொடர்பாக
தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் (LCO), பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்கள் (MSO) மற்றுண் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (PLC) அடுத்த மாதத்திற்குரிய கட்டணத்தொகையினை அடுத்த மாதத்தின் கடைசி வேலை நாளுக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், 01.01.2014 முதல் அடுத்த மாதத்திற்கான நிலுவைத்தொகையின் பேரில் மாதம் ஒன்றிற்கு ஒரு சதவீதண் (1ரூ) என்ற அடிப்படையில் நிலுவையிலுள்ள நாட்களுக்கு கணக்கிட்டு அபராதத்தொகை வசூல் செய்யப்படும். உதாரணமாக, 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான கட்டணத்தொகையினை 2013-ண் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வேலை நாளுக்குள் அபராதமின்றி செலுத்தலாம் . அவ்வாறு செலுத்தாத நபர்களுக்கு 01.01.2014 முதல் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான நிலுவைத்தொகையின் பேரில் மாதம் ஒன்றிற்கு ஒரு சதவீதண் (1ரூ) என்ற அடிப்படையில் நிலுவையிலுள்ள நாட்களுக்கு கணக்கிட்டு அபராதத்தொகை வசூல் செய்யப்படும்.
Comments
Post a Comment